பிரபஞ்சத்தின் ஸ்ருங்கார பேரழகி ஸ்ரீ லலிதை, அவளை எப்படி அடைவது எனும் வழியினைக் காட்டுவது ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ வித்தை. இந்த ஸ்ரீ வித்தை ஸ்ரீ குருமுகமாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக உபதேசிக்கப்பட்டு வந்தது. இது போகத்திற்கும் மோக்ஷத்திற்கும் வழிகாட்டுவது. இத்தகைய அறிய ஞானத்தினை பற்றி தமிழில் அனைவரும் விளங்கி கொள்ளும் வகையில் உரைப்பதே இந்த தளத்தின் நோக்கம்.
ஸ்ரீ லலிதையின் பிரதான சேனாதிபதி ஸ்ரீ வாராகி, ஸ்ரீ லலிதையை அடைய விரும்பும் சாதகர்களுக்கு ஏற்படும் தடைகளை சுக்கல் சுக்கலாக உடைத்தெறிவதில் தேவியிற்கு நிகர் எவருமில்லை. அவளுக்கு உகந்த நாட்கள் இந்த ஆஷாட நவராத்திரி, இந்த நவமி திதியில் ஸ்ரீ வாராகியின் பாதுகாப்பு கவசத்துடன் இந்த தளத்தை தொடங்குகிறோம்.
இந்த தளத்தில் நீங்கள் ஸ்ரீ வித்தையினை பற்றி அநேக விடயங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும் உங்களுக்கு ஸ்ரீ வித்தைப்படி உபாசனை சாதனை செய்ய விருப்பம் இருப்பின் அதற்கான வழிமுறையும் உங்கள் பக்குவம் அறிந்து, குரு அனுமதி பெற்று கற்பிக்கப்படும்.
ஸ்ருங்கார பேரழகியின் பேரழகுப் பாதையில் பயணிக்க அனைவரையும் அழைக்கிறோம்.
பேரன்புடன்
சுமனன்
2014, ஆஷாட நவராத்திரி, நவமி,