சஹஸ்ர என்றால்
ஆயிரம் என்று பொருள். லலிதா
சஹஸ்ர நாமம் என்றால்
லலிதாம்பிகையின் ஆயிரம்
திரு நாமங்கள் என்று
பொருள். இந்த சஹஸ்ர
நாமம் பிரம்மாண்ட புராணத்தில்
காணப்படுகிறது. வேத வ்யாசகர்
எனப்படும் மகரிஷி
(மகா என்றால் பெரிய,
ரிஷி என்றால் முனிவர்)
வியாசகரால் எழுதப்பட்ட பதினெண்
புராணங்களில் ஒன்று. வியாச
என்பதற்கு தொகுப்பாளர் என்ற
ஒரு பொருளும் உள்ளது.
அவர் பராசர முனிவரதும்
சத்யவதி இனுடைய புத்திரர்
ஆவார். பீஷ்மரதும் விசித்திர
வீர்யனதும் ஒன்றுவிட்ட சகோதரர்
ஆவார். வியாசகர் மகா
விஷ்ணுவின் அவதாரமாகவும் கருதப்படுகிறார்
(ஸ்ரீமத் பாகவதம் I, iii, 20), ரிஷிகளில்
முக்கியமானவர்களாக ஏழு
பேரினை குறிப்பிடுவர். இவர்களை
சப்த ரிஷிகள் என்பர்,
அவர்களது பெயர்கள் கௌதமர்
பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி,
காஸ்யபர், வசிஷ்டர், அத்ரி
என்போர். இவர்களின் பெயர்களில்
அபிப்பிராய பேதம் உண்டு.
இந்த சஹஸ்ர நாமம்
183 ஸ்லோகங்களாக பிரம்மாண்ட புராணத்தின்
இரண்டாவது பகுதியில் காணப்படுகிறது.
இந்த 183 ஸ்லோகங்களும் ஆயிரம்
நாமங்களாக மாற்றம் பெறுகின்றது.
புராணங்கள் என்பது கேட்பதற்கு
இனிமையாகவும் திகைப்பூட்டுவதுமான கதைகளை
கொண்ட அதே நேரம்
வேதங்களில் கூறப்பட்ட உண்மைகளை
உரைப்பனவாகவும் இருக்கும் நூற்களாகும்.
இந்து தத்துவங்கள் பிரதானமாக
நான்கு வேதங்களிலிருந்து உருவானவையாக
இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு
வேதங்கள் விளங்கி கொள்ள
கடினமாக இருக்கும். வேதங்களது
சுருக்கம் உபநிடதங்களாக தரப்பட்டுள்ளன.
உப நிடதங்கள் பிரம்மன்
அல்லது கடவுளை விளக்க
முற்படுகின்றன.இத்தகைய விளக்கங்களும்
கணிப்புகளும் பிரம்மத்தினை அறிவதற்கான
வழியினை தரவில்லை. உப
நிடதம் கூறும் பிரம்மம்
சாதாரண மனித மூளையினை
தாண்டிய உருவமற்ற
தெய்வ சக்தி. உப
நிடதங்கள் தன்னை
அறிவதற்கான தத்துவங்களை கூறுகின்றன.
தன்னை அறிதல் என்பது
ஆன்மிகம் தொடர்பான கேள்விகளின்
தர்க்கரீதியான ஒரு முடிவு.இது பிரம்மத்தினை அறியும்
இறுதிப்படியாகும். தற்போதைய நவீன
காலத்தில் தன்னையறிதல் கடவுளை
அறிதல் அல்லது கிருஷ்ண
உணர்வு எனப்படுகிறது.
இந்த சஹஸ்ர
நாமம் வேத வியாசகரால் பிரம்மாண்ட புராணத்தில்
எழுதப்பட்டாலும் உண்மையில்
எட்டு வாக் தேவிகளால்
உருவாக்கப்பட்டவை. (வாக் என்றால்
பேச்சு, குரல் அல்லது
ஒலி எனப்படும்). மேலான
தேவதையும் , அன்புடன் "தலைமை
தாய்" என அழைக்கப்படும் லலிதாம்பிகையின் பிரசன்னத்தில்
இந்த சஹஸ்ர நாமம்
தொகுக்கப்பட்டு பாராயணம் செய்யப்பட்டது.
இதை தொகுத்த எட்டு
வாக் தேவிகளதும் பெயர்கள்:
வசினி, காமேஸ்வரி (சிவனின்
மனைவியான காமேஸ்வரி அல்ல),
மோதினி, விமலா, அருணா,
ஜயினி, ஸர்வேஸ்வரி, கௌலினி
ஆகும். இந்த வாக்
தேவிகள் லலிதாம்பினை வசிக்கும்
ஸ்ரீ சக்கரத்தில் ஏழாவது
ஆவரணத்தில் வசிக்கும்
தேவதைகள் ஆவர்கள். (பார்க்க
நாமம் 996). ஸ்ரீ சக்கரம்
ஒன்பது ஆவரணங்கள் உடையது,
நவாவரண பூஜையினால் பூஜிக்கப்படுவது.
லலிதா தேவி இந்த
எட்டு தேவதைகளையும் தனது
பக்தர்களுக்கு வாக்கு சக்தியினை
அளிப்பதற்கான சக்தியினை கொடுத்துள்ளாள்.
லலிதாம்பிகை ஒருமுறை இந்த
எட்டு தேவதைகளையும் தனிப்பட
அழைத்து தன்னைப்பற்றிய ஸ்லோகங்களை
இயற்றுமாறும் அதனை படித்தால்
தான் மகிழும் நிலை
ஏற்படக்கூடியவாறு அமையுமாறும்
இருக்கவேண்டும் என ஆணையிட்டாள்.
அவளுடைய ஆணைப்படி அவளது
அரச அவையில் வாக்தேவிகளால்
எல்லா தேவ தேவிகளும்
இருக்குமாறு பாராயணம் செய்யப்பட்ட
தோத்திரமே இந்த சஹஸ்ர
நாமம்.
இதன் அமைப்பு
இந்த சகஸ்ர
நாமம் மூன்று பகுதிகளை
கொண்டது. முதலாவது பூர்வ
பாகம், (பூர்வ என்றால்
முதல், முதன்மை என்றும்
பாகம் என்றால் பகுதி
என்றும் பொருள்), இது
அறிமுகம் போன்றது. இது
ஐம்பத்தியொரு ஸ்லோகங்களை கொண்டது.
இரண்டாவது பகுதி ஸ்தோத்திரம்
(பாடல்கள்) ஸ்தோத்திர பாக
அல்லது மத்திய பாக்க
எனப்படும், இதுவே பிரதான
பகுதி 183 சுலோகங்களுடன் அம்பிகையின்
ஆயிரம் திரு நாமங்களை
கொண்டது. கடைசி பகுதி
உத்தர பாகம் அல்லது
முடிவுப்பகுதி எனப்படும்.
இந்த பகுதி 83 ஸ்லோகங்களை
கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பாகத்திலும்
உள்ள பாடல்களின் எண்களில்
சிறிது வேறுபாடுகள் காணப்படுகின்றன.
எனினும் மொத்த எண்ணிக்கை
320 (51+183+86) ஆக எப்போதும் மாறுபடவில்லை.
முதலாவது பகுதி மஹாவிஷ்ணுவின்
குதிரை முக அவதாரமான
ஹயக்ரீவருக்கும் மஹா
முனிவரான அகஸ்தியருக்கும் நடைபெறும்
உரையாடலாக உள்ளது. இது
பற்றி பின்னர் விபரிக்க
படும்.
(ஹயக்ரீவர் பற்றிய
மேலதிக தகவல்கள்: ஹயக்ரீவர்
பற்றி பல்வேறு தகவல்கள்
காணப்படுகின்றன. ஹயக்ரீவர் மஹாவிஷ்ணுவின்
அவதாரம் எனக்கருதப்படுகிறார். அறிவிற்கும்
ஞானத்திற்குமான தெய்வமாக வணங்கப்படுகிறார்.
மனித உடலும் குதிரை
முகமும் உடைய வெண்ணிறமானவர்,
வெள்ளை அணித்து
வெள்ளை தாமரையில் வீற்றிருப்பவராக உருவகப்படுத்தப் படுகிறார். இந்த
கதையுருவம் மறைமுகமாக அசுர
சக்திகளான ஆசையினையும் இருளையும்
தூய அறிவின் மூலம்
வெற்றி கொள்ள வேண்டும்
என்பதனை உணர்த்துகிறது.)
ஹயக்ரீவர் (இதே பெயரைக்கொண்ட
ஒரு முனிவர்ரக இருக்க
கூடும்) சாந்தோக்கிய உப
நிடத்தினையும் மற்றும் சில
நூற்களையும் எழுதியுள்ளார்.
சாக்த சம்பிரதாயத்தில் ஹயக்ரீவருடைய பங்கு
வித்தியாசமானது. ஹயக்ரீவன் என்ற
அசுரன் கஸ்யப்ப பிரஜாபதியின்
மகனாக பிறந்து, துர்க்கையினை
(லலிதாம்பிகையின் ஒரு
வடிவம்) நோக்கி கடுமையான
தபஸ் புரிந்து தான்
இன்னொரு ஹயக்ரீவரால் மட்டுமே
கொல்லப்படவேண்டும் என்ற
வரத்தினை பெற்று இருந்தான்.
இதனால் அவன் தேவர்களை
துன்புறுத்த தொடங்கினான். தேவர்கள்
விஷ்ணுவினை நாடினார்கள், நீண்ட
யுத்தத்தின் பின்னரும் விஷ்ணுவால்
அவனை கொள்ள முடியவில்லை.
விஷ்ணு களைப்படைந்தவராக வைகுண்டம்
மீண்டு யோக நிலையில்
அமர்ந்து தன்னை சக்தியூட்டிக்கொள்ள தியானத்தில் அமர்ந்தார்.
தனது தலையினை சாய்ப்பதற்கு
உதவியாக வில்லின் நாணினை
ஊன்றி இருந்தார். அசுரனால்
மீண்டும் துன்புறுத்தப்பட்ட தேவர்கள்
விஷ்ணுவினை எழுப்புவதற்கு முயற்சித்தனர்.
ஆனாலும் முடியவில்லை. தலையினை சாய்த்துள்ள
வில்லினை அகற்றினால் விஷ்ணுவினை
எழுப்பி விடலாம் என்று
தேவர்கள் கரையான்களை வில்லின்
நாணினினை அரிக்கச் சொல்லி
உத்தரவிட்டனர். அந்த வில்லின்
நாணின் சப்தம் பிரபஞ்சத்தினை உலுக்கும் சப்தத்தினை
ஏற்படுத்தியது. அறுபட்ட நாண்
அப்படியே விஷ்ணுவின் தலையினையும்
கொய்து விட்டது. தேவர்கள்
பயந்து தமது செய்கைக்காக
வெட்கப்பட்டு துர்க்கையிடம் முறையிட்ட்டனர்.
அவர்களது பிரார்த்தனைக்கு இரங்கி துர்க்கை அவர்களை
" கவலை வேண்டாம், பிரபஞ்சத்தில்
எந்த காரியமும் காரணம்
இன்றி நடைபெறுவதில்லை,
இது நடைபெற்றதன் காரணமும்
ஹயக்ரீவ அசுரனின் அழிவிற்காகவே
என்றும், விஷ்ணுவின் தலையற்றக்
உடலிற்கு குதிரை முகத்தினை
பொருத்தும் படியும் அதன்பின்
அவர் ஹயக்ரீவர் என
அழைக்கப்படுவார் என்றும்
அவர் உங்கள் எதிரியினை
கொள்வார் என்றும் ஆறுதல்
அளித்தார். அதன்படி பிரம்மா
விஷ்ணுவின் தலையற்ற உடலிற்கு
குதிரை முகத்தினை இணைந்து
அசுரனுடன் போர் புரிந்து
வெற்றி பெற்றார். பூர்வ
பாகத்தில் இந்த கதை
உருவகங்களில் வேற்றுமை காணப்படுகிறது.
மற்றுமொரு கதையின்படி
மது கைபடர் என்ற
அசுரர்கள் பிரம்மாவிடம் இருந்து
வேதங்களை திருடி கொண்டு
சென்று விட்டனர் என்றும்
மகா விஷ்ணு ஹயக்ரீவர்
அவதாரம் எடுத்து அவற்றை
மீட்டார் என்றும் காணப்படுகிறது.
மது கைபடர்கள் இவருடைய
உடலும் பன்னிரெண்டு பாகங்களாக
(6 x 2 = 12) மாறின, இது இன்றைய
பூமியின் தகடுகளின் எண்ணிக்கையுடன் பொருந்தி வருகின்றான.
இன்னொரு கதையின் படி
ஹயக்ரீவர் நான்கு வேதங்களையும்
தொகுத்தவர் எனக்காணப்படுகிறது.
முடிவுப்பகுதி பலஸ்ருதி
எனப்படும். இது சஹஸ்ர
நாமம் ஜெபிப்பதால் ஏற்படும்
பயன்களை கூறுவது. நடுவில்
காணப்படும் 183 ஸ்லோகங்கள் ஆயிரம்
நாமங்களை உண்டாக்குகிறது. இந்த
ஒரு சஹஸ்ர நாமம்
மட்டுமே ஒரே பெயர்கள்
திரும்பத்திரும்ப வராமலும்,
அர்த்தமற்ற நாமங்கள் வராமலும்
காணப்படும் ஒரே நூலாகும்.
இந்த நாமங்கள் அதற்குரிய
சரியான அர்த்தத்தினை கொண்டிருக்கும் அதேவேளை சமஸ்க்ருத
இலக்கணத்திற்கமைய இருப்பதும்
இதன் சிறப்பு. இந்தக்காரணத்திற்காக சமஸ்க்ருத இலக்கியம்
இருபத்தி நான்கு சூத்திரங்களை
கொண்ட "ஸலக்ஷர சூத்திரா"
என்ற நூலினை கொண்டிருக்கிறது.
இவை காலப்போக்கில் பெரும்பாலும்
அழிவுற்றுவிட்ட நிலையில் இவற்றை
மீள உருவாக்குவதற்கு ஸ்ரீ
நரசிம்ம நாத என்பவர்
நாற்பது ஸ்லோகங்கள் கொண்ட
"பரிபாஷா" எனும் நூலினை
ஆக்கினார். அது சமஸ்க்ருத
இலக்கணத்தினை ஆழமாக விளக்குவதோடு
மற்றைய மொழிகளில் மொழிபெயர்ப்பது இயலாத காரியமும்
ஆகும். சமஸ்க்ருதம் ஐம்பத்தியொரு
அட்சரங்களை உடையது. இவற்றில்
முப்பத்தி இரண்டு எழுத்துக்கள
மட்டுமே இந்த நாமங்களை
தொடங்குவதற்கு உபயோகிக்கப்பட்டுள்ளது. மற்றைய
பத்தொன்பது எழுத்துக்களும் பாவிக்கப்படவில்லை.
இவை பாவிக்கப்படாதாதன் காரணம்
என்னவென்று தெரியவில்லை. நாமங்கள் தொடங்கும்
32 எழுத்துக்களும் ஒவ்வொரு வாக்
தேவிகளுக்குமாக ஒதுக்கப்பட்டுள்ளது. சாம்,சமஸ்க்ருத
இலக்கியத்தில் இந்த ஐம்பத்தியொரு
எழுத்துக்கும் ஒவ்வொரு தெய்வம்
உண்டு. குறித்த எழுத்தினை
உச்சரிக்கும் போது அந்த
எழுத்துக்குரிய தேவதையினையும் வணங்கும்
செயன்முறையும் நடைபெறுகிறது. லலிதாம்பிகை
இந்த எல்லா தெய்வங்களையும் கட்டுப்படுத்தும் உச்ச
சக்தி ஆவாள். அத்தகைய
ஜெபங்கள் சாதனை செய்பவர்களுக்கு சில சித்திகளையும்
கொடுக்கும் வல்லமை உள்ளது. ஒரு
நாமத்தினை ஜெபிக்கும் போது
லலிதாம்பிகையின் குறித்த
சக்தியினை வணங்குவதோடு அந்த
எழுத்துக்களுடன் தொடர்புடைய
தெய்வ சக்தியினையும் விழிப்பிக்கும் மந்திரமும் ஆகிறது.
ஒருவன் இந்த சஹஸ்ர
நாமத்தின் ஆற்றலினை உண்மையான
பக்தியுடன் பாராயணம் செய்து
இதனை அனுபவத்தில் உணரலாம்.
இந்த சாதனை ஒன்றே
ஒருவனை முக்தி அடைய
வைக்கும் வல்லமை உள்ளது.
இந்த சகஸ்ர நாமத்தில்
லலிதாம்பிகை தொடர்ச்சியாக பிரம்மமாக
உருவகப்படுத்தப்படுகிறாள், இந்த
பிரபஞ்சத்தினை நிர்வாகிக்கும் நிர்வாகி.
அவள் தனியே ஒருவனுக்கு
முக்தியினை வழங்ககூடிய வல்லமை
உள்ளவள். மற்றைய கடவுள்களும் தேவதைகளும் அவர்கள்
அளவில் அதீத சக்தி
நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களை
வணங்குபவர்களுக்கு நன்மை
செய்யக்கூடியவர்களாக உள்ளார்களேவொழிய முக்தி வழங்கும்
வல்லமை உடையவர்கள் அல்லர்.
இந்த ஆயிரம் நாமங்களும்
எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை
அறிதல் மிகவும் ஆச்சரியமான
ஒன்றாகும். உதாரணத்திற்கு கடைசி
நாமாவான "லலிதாம்பிகா" இனை எடுத்துக்கொண்டால் இது
ஐந்து சமஸ்க்ருத எழுத்துக்களை
உடையது. அனால் நரசிம்ம
நாதரின் கருத்துப்படி
ஆறு எழுத்துக்களை கொண்டிருக்க
வேண்டும். இதனை விளங்கிக்கொள்ள
"ஓம்"
இனையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். லலிதா
சஹஸ்ர நாமத்தினை ஜெபிக்கும்
போது இறுதியில் ஓம்
சேர்க்க வேண்டும். மேலும்
ஒவ்வொரு நாமாவும் சூஷ்சுமமாக
"அதுவே நான்" என்ற
மகா வாக்கியத்துடன் தொடர்புடையது.
எடுத்துக்காட்டிற்கு முதல்
நாமாவாகிய "ஸ்ரீ மாதா"
இணை எடுத்துக்கொண்டால் பிரபஞ்ச
தாய் என்ற பொருள்
வருகிறது. இதன் உடைய
சூஷ்ம அர்த்தத்தினை விளங்கி
கொள்ள தந்திர நூற்களின்
ஊடாக அணுகினால், இந்த
நாமா "ஸ்ரீ மாதா
அஸ்தி" என வரவேண்டும்.
அஸ்தி என்றால் இருப்பது
என்று பொருள், ஆகவே
இந்த நாமாவின் பொருள்
"லலிதாம்பிகை பிரபஞ்ச தாயாக
இருப்பவள்" என்று
வரும். இத்தகைய விளக்கங்கள்
ஆயிரம் நாமங்களுக்கும் இருந்ததாகவும் அவை
தற்போது கிடைப்பதில்லை எனவும்
கூறுகின்றனர்.
ஒரே பொருளை
கொண்ட பல நாமங்கள்
உள்ளன. ஒரே நாமத்தினை
திரும்ப திரும்ப உச்சரிப்பது
புனருக்த தோஷம் (மீள
உச்சரிப்பதால் ஏற்படும் பிழை)
எனப்படும். அனால் இந்த
சஹஸ்ர நாமாவில் இந்த
புனருக்த தோஷத்தினால் பாதிக்கப்படவில்லை.
ஒரே பொருளினை இரணடு
நாமாக்களால் கூறுவதி தோஷமில்லை.
பாரிபாஷை ஸ்லோகங்களின் துணை
கொண்டு நாமங்களாக பிரிக்கப்பட்டிருக்கவில்லை என்றால் எமக்கு
இந்த 1000 நாமங்களும் கிடைத்திருக்காது,
இதனாலேயே எந்த பிழையும்
இன்றி ஆயிரம்
நாமாக்கள் எமக்கு கிடைத்திருக்கின்றன.
அடுத்த பதிவில்
இந்த சசஹஸ்ர நாமம்
முதலில் உருவான சந்தர்பத்தினை
பார்ப்போம்.
No comments:
Post a Comment