Dedication - சமர்ப்பணம்

“If God had patented the air, we could not breathe.” Only by sharing love does one grow. -- Guruji Amritananda Devipuram

இந்த தளம் எனது ஸ்வ குருவான ஸ்ரீ அன்னபூர்ணாம்ப ஸஹித ஸ்ரீ அமிர்தானந்த நாதர் பாதகமலங்களுக்கு சமர்ப்பணம்!

This site is dedicated to lotus feet of my beloved, lovable Guruji Sri Annapoornambha Sahitha Amirthananda Nata

Disclaimer:
Purpose of this site is to share the ancient secret wisdom Sri Vindya into Tamil speaking seekers for the educational purpose.

Tuesday, December 16, 2014

பெண்மையின் புனிதம் - அன்பும் பயமும்

இது குருஜியின் Sacred Feminine என்ற கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கில மூலத்தினை இந்த இணைப்பில் காணலாம்: Devipuram


எமது அகவுலகத்தில் அன்பின் ஒளியை உருவாக்குவதன் மூலம் நாம் எம்மை தெய்வ சக்தி உடையவர்களாக்கி கொள்ளலாம். இது எமது கீழான உணர்ச்சிகளை உருமாற்றுவதற்கு இது ஒரு சிறந்த வழி. எமது வாழ்க்கையின் இருப்பில் இருக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு மகிழும் மனநிலை எமக்கு வாழ்வினை அமிர்தமாக்கும். இந்த நன்றியுணர்வு இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் மதிப்புடன் பார்க்கும் மன நிலையினை தரும். இது இந்த வாழ்வினை மகிழ்ச்சி நிறைந்ததாக்கும்.

நன்றியுணர்வும் மனதில் கருணையும் கூடிய தன்மையே குணமளிக்கும் மருந்தாகும். இதுவே ஒருவரை குணப்படுத்தும். அன்பும் கருணையுடனும் பகிர்ந்தளிக்கப்படும் நன்றியுணர்வு பல உயிர்களையும், உறவுகளையும் உருமாற்ற வல்லது! மனம் கருணையுடையதாய் இருக்கும் போது அன்பு, அழகு, தெய்வ சக்தி என்பவற்றை அனுபவிக்கும் ஆற்றலைப் பெற்று எமது உணர்வின் அடி ஆழத்திற்கு ஒன்றிச் செல்லும் வல்லமையினை பெறுகிறது. எமது உண்மையான ஸ்வருபத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டுமாயின் நாம் எல்லா உயிர்களையும் மதிப்பதற்கும், நன்மை செய்வதற்கும் உரிய பண்பினை பெற்று எமது இதய கமலங்களை தெய்வீக அமிர்தம் பாய்ந்து ஒடுவதற்குரியதாக திறந்து வைத்திருக்க வேண்டும்.

அன்பின் ஒளியை எமது அகத்தில் சூக்ஷ்ம தேகத்தில் உருவாக்குவது உண்மையான தெய்வீக உருமாற்றத்திற்கு வழிவகுக்கும். இந்த அகவிழிப்புணர்வு எமது உண்மை அமைதி ஸ்வரூபத்தினை அறிய தடையாக எம்முள் காணப்படும் அகமுரண்பாடு மற்றும் நாம் நம்பும் ஒன்றையே உண்மை என்று எண்ணும் இறுக்க தன்மை போன்றவற்றை நீக்கி எம்மில் இருந்து மனஅழுத்தங்கள், வெறுப்புணர்வு, மற்றவரை குற்றம் சாட்டும் தன்மை என்பவற்றிலிருந்து விடுவிக்கும். எமது உண்மை ஸ்வரூபம் எனும் அன்பினை உணர்ந்து, எமது பொறுப்புகளை மன மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு செயற்படும் போது உலக ஆசைகள் எனும் இருளில் இருந்து நிரந்தர ஆனந்தம் எனும் ஒளி நிலையினை அடைகிறோம்.

நாம் தெய்வீக அன்பினையும் ஆனந்தத்தினையும் அனுபவிக்க ஆரம்பிக்கும் போது நாம் ஸோம எனும் அமிர்தத்தினை பருக ஆரம்பிக்கின்றோம். ஒரு தடவை இந்த அமிர்த ஆனந்தத்தினை அகத்தில் அனுபவித்து பருகிவிட்டால் எமது உணர்வின் ஆழமாகிய சுயத்தினை தொட்டுவிடுவோம். இந்த உயர் உணர்வு நிலை எமது எண்ணங்கள், செயல்களூடாக வடிகட்டி வரும்போது எமது ஒவ்வொரு செய்கையிலும், பிரபஞ்சத்தின், மனிதருடனான உறவிலும் தெய்வீக அன்பு பாயத்தொடங்கும்.

என்னுடைய ஆன்ம பயணத்தின் புனித தருணங்கள் என்னை தெய்வீக தாயுடன் இணைத்தது, அவளின் அருள் எல்லாவித துன்பங்களிலிருந்தும் மீட்டு வெளிக்கொணரும் சக்தி வாய்ந்தது. அவளுடைய ஒவ்வொரு பார்வையும் எல்லாவித தீமைகள் குழப்பங்களையும் கரைத்து இறுதியாக பயன்களில் பெரிய பயமான மரண பயத்தினையும் நீக்கும் வல்லமை உடையது. அவளுடைய பார்வை எம்மை எல்லாவித உலக, மன, உடல் துன்பங்களில் இருந்து மீட்டு , சம்ஸாரம் எனும் உலக துன்ப கடலில் இருந்து மீட்டு எமது ஆன்மாவை காலமற்ற வெளியில் விடுதலையினை தருகிறது.

தெய்வீக பெண்மையின் ஆயுதங்கள் எப்போதும் எமக்கு அழிவையும் மரணத்தையும் தருவதில்லை, ஒரு கண்டிப்பான ஆசிரியர் எம்மை திருத்துவதற்கு வைத்திருக்கும் பிரம்பினை போன்று எம்மை நல்வழிக்கு இட்டுச்செல்லும் வழிகாட்டி. உண்மையில் தேவி எம்மை ஒவ்வொரு தீமை, அதிஷ்டமின்னை, துன்பம் என்பவற்றில் இருந்து காக்கும் கருணையுடைய ராட்சகி. எமது துன்பங்களுக்கு தனது அன்பினை தந்து முயற்சியுடன் முன்னேற வழிகாட்டுபவள். அத்தகைய தேவியிடம் சரணடைவதால் எமது துன்பங்களை மென்மையாக்கி  இறுதியில் எம்மை உருக்கி ஆனந்தத்தில் சேர்ப்பவள்!


குருஜி அன்னப்பூர்ணா ஸஹித அமிர்தாந்த நாத 

*************************
the core facts of this article was driven from Guruji Sri Amirhtananda's article "Sacred Feminine " and translated to Tamil for the purpose of sharing knowledge and information. 



the original article was presented in the Devipuram web site. 

No comments:

Post a Comment